ஜப்பானின் புதிய பிரதமருக்கு மஹிந்த வாழ்த்து!
ஜப்பானின் புதிய பிரதமராக பதவியேற்ற ஃபுமியோ கிஷிடாவுக்கு இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜப்பானின் புதிய பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.