ஜனாதிபதி தலைமையில் ஆளும் கட்சியின் உறுப்பினர்களுக்கிடையில் நாளை சந்திப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆளும் கட்சியின் உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பொன்று நாளை இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி மாளிகையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
உதய கம்மன்பிலவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாத தீர்மானம் மீதான விவாதம் இடம்பெறவுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.