சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – லான்சூவில் ஊரடங்கு அமுல்!
சீனாவின் வடமேற்கு மாகாணமான கான்சுவின் தலைநகரமான லான்சூவில் நேற்று முதல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மக்கள் அவசரநிலை தவிர ஏனைய காரணங்களுக்காக வீட்டைவிட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குடியிருப்பு வளாகங்களில் இருந்து வெளியே செல்வதற்கு அனுமதிச்சீட்டு முறை நடைமுறைபடுத்தப்படுவதாக நகர நிர்வாகம் அறிவித்துள்ளது.
சீனாவின் வடமேற்கு மாகாணமான கான்சுவின் தலைநகரம் லான்சூவில் நேற்று முன்தினம் புதிதாக 6 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய, கடந்த 18ஆம் திகதி முதல் மொத்தம் 39 பேர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.