சிவனொளிபாத மலைக்கு யாத்திரியாக வந்தவர் மரணம்
சிவனொளிபாதமலையை தரிசிக்க வந்த 56 வயதுடைய நபர் மூச்சு திணறல் ஏற்பட்டு மரணித்தாக மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலை வைத்திய அதிகாரி லியத்தப்பிட்டிய தெரிவித்தார்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்க தெரிவிக்கையில்,
அம்பலாந்தொட்ட பகுதியில் இருந்து வருகை தந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ரிகாடன் பகுதியில் இரவு 10:40 மணியளவில் கடும் குளிர் காலநிலை நிலவியதால் மூச்சு திணறல் ஏற்பட்டதால் மரணித்துள்ளதாகவும் இவரின் சடலம் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை நடாத்தப்பட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.