Main Menu

சர்வதேச விமான நிறுவனத்தை ஏலத்தில் விற்கும் பாகிஸ்தான் அரசு

பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தை வரும் ஒக்டோபர் 1ஆம் திகதி ஏலம் விடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நஷ்டத்தை ஈடுகட்ட 51% முதல் 100% விமான நிறுவனங்களை விற்கப் பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளது.
இதனை, தேசிய சட்டமன்ற தனியார் மயமாக்கல் குழுவின் தலைவர் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தால் வலியுறுத்தப்பட்ட சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, நஷ்டத்தில் இயங்கும் விமான நிறுவனத்தில் 51% முதல் 100% வரை விற்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு முன்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.