சர்வதேச விமானப் போக்கு வரத்திற்கான தடை நீட்டிப்பு
சர்வதேச விமானப் போக்குவரத்திற்கான தடை எதிர்வரம் பெப்ரவரி 28 ஆம் திகதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்றின் பரவல் வேகமெடுத்துள்ள நிலையில் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சர்வதேச பயணிகள் விமான சேவைக்கான தடை 2022 பெப்ரவரி 28ஆம் திகதி நள்ளிரவு 11.59 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் விமான கட்டுப்பாட்டரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சில சேவைகள் மட்டும் அனுமதிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.