கொழும்பு – ப்ளூமெண்டல் பகுதியில் துப்பாக்கிச் சூடு ஒருவர் படுகாயம்

கொழும்பு – ப்ளூமெண்டல் ரயில் கடவைக்கு அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகே இன்று (18) பிற்பகல் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 38 வயதுடைய ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பகிரவும்...