கொலையாளிகளை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!
கர்ல் டயஸ் என்பவரின் படுகொலை தொடர்பாக, முதற்தர கொலை வழக்கில் தேடப்பட்டுவரும் இருவரின் ஒளிப்படங்களை பொலிஸார் தற்போது வெளியிட்டுள்ளனர்.
அவர்களின் பெயர், இடம், வயது மற்றும் இதர தகவல்களை வெளியிட்டுள்ள பொலிஸார், அவர்களை கண்டுபிடிக்க உதவுமாறு பொதுமக்களிடம் கேட்டுள்ளனர்.
கிழக்கு அவனியூ வடக்கு சுற்றுவட்டப் பகுதியில், கடந்த மே மாதம் 18ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில் 33 வயதான ஹமில்டனை சேர்ந்த கர்ல் டயஸ் என்பவர் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
அவர் படுகாயங்களுடன் ஹமில்டன் மத்திய மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டபோதும், அதே தினத்தன்று பகல் அவர் உயிரிழந்தார்.
இதனையடுத்து, அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்திய பொலிஸார், கூர்மையான ஆயதங்களால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதனை உறுதிப்படுத்தினர்.
இதன்பிறகு, தீவிர விசாரணைகளை தொடங்கிய பொலிஸார், குறித்த கொலைக்கும் 28 வயதான ஹமில்டனை சேர்ந்த டேனியல் வைஸ், 22 வயதான ரொறன்ரோவை சேர்ந்த செமிடர் ஹாசன் ஆகிய இருவரும் தொடர்பு பட்டிருப்பதாக அறிவித்தனர்.
தற்போது இவர்களை தீவிரமாக தேடி வரும் ஹமில்டன் பொலிஸார், இவர்கள் குறித்து தகவல் தெரிந்தவர்கள் தம்மை உடடியாக தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.