குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடுகள்
சமீபத்திய குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு தலா 10 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்பட உள்ளது.
இந்தத் தாக்குதல்களில் காயமடைந்த ஒவ்வொருவரும் 5 இலட்சம் ரூபா தொகையை இழப்பீடாக பெறுவார்கள். தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி, இளைஞர் அலுவல்கள் அமைச்சின் பொறுப்பில் இயங்கும் அலுவலகம் ஒன்றின் மூலம் இழப்பீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளன.
இதேவேளை குண்டுத் தாக்குதல்களில் சேதமடைந்த சொத்துக்களின் சேத விபரங்களை மதிப்பிட்டு, 5 இலட்சம் ரூபா உச்ச வரம்பிற்கு உட்பட்டவாறு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சேதமடைந்த தேவாலயங்களைப் புனரமைப்பதற்கான செலவையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள உள்ளது.