கிளிநொச்சியில் வாள்வெட்டுத் தாக்குதல்- 11 பேர் காயம்
கிளிநொச்சி- உருத்திரபுரம், கூலாவடிப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் 11 பேர் காயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் வீதியால் சென்ற உழவு இயந்திரம், மாட்டுடன் மோதியதில் ஏற்பட்ட முரண்பாடே வாள் வெட்டுச் சம்பவம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு, இறுதியில் வாள் வெட்டில் நிறைவடைந்துள்ளது.
இதில் காயமடைந்த 11பேரில் இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதுடன் ஏனையோர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.