கம்பஹாவில் சற்று முன்னர் வெடிப்பு சம்பவம்
கம்பஹாவில் சற்று முன்னர் வெடிப்பு சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பூகொட நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இந்த சம்பவம் பதிவாகி உள்ளது.
வெடிப்பு சம்பவம் தொடர்பில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை.
எனினும் நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள காணி ஒன்றில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றதாக அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.