ஐ.நா குழுவினர் சிறிலங்கா மனித உரிமை ஆணைக்குழுவுடன் சந்திப்பு
சிறிலங்காவில் பயணம் மேற்கொண்டுள்ள சித்திரவதைக்கு எதிரான ஐ.நா உபகுழுவின் பிரதிநிதிகள் சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவை நேற்று சந்தித்துள்ளனர்.
விக்டர் சகாரியா தலைமையிலான இந்தக் குழுவில், ஸ்ரேபூஷண் குப்த் டோமா, பெட்ரோஸ் மைக்கேலிடஸ், ஜூன் லோபஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
நேற்று இந்தக் குழுவினர் சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குச் சென்று, அதன் தலைவர் கலாநிதி தீபிகா உடகம, மற்றும் ஆணையாளர்கள் ரமணி முத்தெட்டுவேகம, அம்பிகா சற்குணநாதன் ஆகியோரைச் சந்தித்து, கரிசனைக்குரிய விவகாரங்கள் தொடர்பாக கலந்துரையாடினர்.
சித்திரவதைக்கு எதிரான ஐ.நா உபகுழுவின் பிரதிநிதிகள் சிறிலங்காவுக்கு மேற்கொண்டுள்ள முதலாவது பயணம் இதுவாகும்.