ஐ.எஸ் பயங்கர வாதிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட இரண்டு பெண்கள் கைது!
கேரளாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட இரண்டு பெண்கள் தேசிய புலனாய்வு அமைப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இருவரும் சமூக வலைத்தளங்களில் ஐ.எஸ் அமைப்பின் கொள்கைகளை பிரசாரம் செய்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அதேவேளை ஜிகாத் எனும் போரில் பங்கேற்க இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களிடம் விசாரணைகளை முன்னெடுப்பதன் ஊடாக மேலும் பல விடயங்கள் தெரிய வரும் என புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
பகிரவும்...