Main Menu

எரிபொருள் பற்றாக்குறை – மின் உற்பத்தி இல்லாததால் இருளில் மூழ்கிய லெபனான்

லெபனானில் மின் உற்பத்தி நிலையங்களை இயக்க போதிய எரிபொருள் இல்லாததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கி உள்ளது.

இருளில் மூழ்கிய லெபனான்பெய்ரூட்:
லெபனான் அரசு கடந்த 2 ஆண்டுகளாக கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. பொருளாதார நெருக்கடியால் அங்கு எரிபொருள் பற்றாக்குறை நீடித்து வருகிறது. எரிபொருள் தட்டுப்பாடால் நாட்டில் இயங்கும் பிரதான மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், அங்கு மின் உற்பத்தி நிலையங்களை இயக்க போதிய எரிபொருள் இல்லாமல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. எனவே, மின்சாரப் பற்றாக்குறையும் ஏற்பட்டு லெபனான் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கி உள்ளது.

மருத்துவமனைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் வழங்கும் இடங்களில் மின்சாரம் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
சில இடங்களில் டீசல் ஜெனரேட்டர்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும், இந்த மின் தடை பல நாட்கள் நீடிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பகிரவும்...