ஊழல் நிறைந்த சூழல் மாறாவிட்டால் நாட்டை சரியாக வழிநடத்த முடியாது – பொன்சேகா
ஊழல் நிறைந்த சூழல் மாறாவிட்டால் நாட்டை சரியான பாதையில் வழிநடத்த முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
களனியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், பொருளாதார நிபுணர்கள் சுதந்திரமாக முடிவெடுப்பதற்கு ஊழலற்ற நாடு உருவாக்கப்பட வேண்டும் என்றார்.
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் டபிள்யூ.டி.லக்ஷ்மன் தனது செயற்பாடுகளை தொடர முடியாது எனக் கூறியே பதவியை இராஜினாமா செய்தார் என சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.
மேலும் புகழ்பெற்ற வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படிப்பை முடித்தவர்கள் நாட்டில் இருந்தாலும் ஊழல் நிறைந்த சூழலில் அவர்களால் வேலை செய்ய முடியாது என கூறினார்.
ஆகவே ஊழலற்ற நாட்டினை உருவாக்க, அனைத்து துறைகளிலும் உறுதி செய்யப்பட வேண்டும் என சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.