Main Menu

உயர் இரத்த அழுத்தமே நாட்டில் ஏற்படும் 70% மரணங்களுக்குக் காரணம் ! – சுகாதார அமைச்சு

”இலங்கையில் ஏற்படும் மொத்த மரணங்களில் 70 சதவீதமானவை உயர் இரத்த அழுத்தத்தால் ஏற்படும் நோய்களினாலேயே நிகழ்கின்றன” என சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவு தெரிவித்துள்ளது.

இது குறித்து தொற்றா நோய்கள் பிரிவின் விசேட வைத்தியர் சமிந்தி சமரகோன் கருத்துத் தெரிவிக்கையில் ”2021ஆம் ஆண்டு தொற்றா நோய்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், நாட்டு மக்களில் 34.8 சதவீதமானோர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்களில் 64 சதவீதமானோர் இதற்கு எவ்வித மருந்துகளையும் பயன்படுத்தவில்லை எனவும் விசேட வைத்தியர் சமிந்தி சமரகோன் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...
0Shares