ஈஸ்டர் தாக்குதல்: விசாரணைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும் – எதிர்க்கட்சி
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என எதிர்க்கட்சி வலியுறுத்தியுள்ளது.
விசாரணைகளை விரைந்து முடித்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா தெரிவித்தார்.
தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர், அந்த தரப்பிற்கு நிதியுதவி மற்றும் அரசியல் ரீதியாக உதவியவர்கள் யார் என்பது குறித்து அறிந்துகொள்ள பொதுமக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர் என கூறினார்.
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான முக்கிய கேள்விகளுக்கு இன்னும் பதிலளிக்கப்படவில்லை என்றும் அதேநேரத்தில் விசாரணைகள் மந்தகதியில் தொடர்ந்தால் பலருக்கும் கேள்விகள் எழும் என்றும் நிரோஷன் பெரேரா குறிப்பிட்டார்.