இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது ஆறு கமரூனிய வீரர்கள் உயிரிழப்பு
நாட்டின் வடக்கே உள்ள இராணுவ புறக்காவல் நிலையத்தில் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் குறைந்தது ஆறு கமரூனிய வீரர்கள் கொல்லப்பட்டனர்.
மேலும் நான்கு பேர் காயமடைந்த இந்த தாக்குதல் அண்மைய மாதங்களில் வடக்கு கமரூனில் இடம்பெற்ற தாக்குதலில் மிகக் கொடூரமானது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கையை அறிவித்த அரச தொலைக்காட்சி தாக்குதல் குறித்து மேலதிக விவரங்களை வெளியிடவில்லை.
போகோ ஹராமின் முன்னாள் தலைவரான அபுபக்கர் ஷெகாவ் இறந்ததிலிருந்து இப்பகுதியில் இராணுவம் மீதான தாக்குதல்களில் தொடர்ச்சியாக அதிகரித்துள்ளன.