Main Menu

இலங்கை தமிழரசு கட்சி திருகோண மலையில் முள்ளி வாய்க்கால் கஞ்சி நினைவேந்தல்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (மே-18) மாலை 4 மணியளவில் திருகோணமலை காளி அம்மன் கோயில் முன்றலில் திருகோணமலை மாவட்ட தமிழரசு கட்சியின் இளைஞர் மற்றும் மகளிர் அணியினர் இணைந்து முள்ளிய வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடாத்தினர்.

 

இதில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் உட்பட கட்சியின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

இறுதி யுத்தத்தின் போது இனபடுகொலை செய்யப்பட்டவர்களை நினைவு கூர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி நினைவேந்தல் இடம் பெற்றது.

பகிரவும்...
0Shares