இலங்கைக்கு வருகை தரவுள்ள IMF பிரதிநிதிகள் குழு
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த வார இறுதியில் இலங்கைக்கு வருகைதரவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள விரிவாக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான மூன்றாவது மீளாய்வு குறித்துக் கலந்துரையாடுவதற்காக இந்தக் குழு இலங்கை வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் பிரதானி பீட்டர் ப்ரூவர் தலைமையில் இந்த குழு இலங்கை வரவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
பகிரவும்...