இலங்கைக்கான சுற்றுலா பயணத்திற்காக விதித்திருந்த தடையை சில நாடுகள் நீக்கியுள்ளன

இலங்கைக்கு சுற்றுலா பயணத்தில் ஈடுபடுவது தொடர்பாக இந்தியர்களுக்கு இந்த நாட்டு அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டிருந்த சுற்றுலா தடைக்கான ஆலோசனையில் தளர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைவாக இலங்கையில் தற்போதைய நிலைமை திருப்தியான முறையில் திரும்பிக் கொண்டிருப்பதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் சுற்றுலா பயணத்தை மேற்கொள்ளும் போது அவதானத்துடன் செயற்படுமாறு அந்நாட்டு அரசாங்கம் இந்திய மக்களுக்கு அறிவித்துள்ளது.
இதே வேளை சுவிட்ஸ்லாந்து நாடும் அந்நாட்டு பிரஜைகள் இலங்கைக்கு சுற்றுலா பயணத்தில் ஈடுபடுவது தொடர்பில் விதித்திருந்த வரையறையை நீக்கியுள்ளது.
உயிர்த்தெழுந்த ஞாயிறு அன்று இடம்பெற்ற தாக்குதலுக்கு பின்னர் இலங்கைக்கான சுற்றுலா பயணத்தை மேற்கொள்வதை தவிர்க்குமாறு தமது நாட்டு பிரஜைகளுக்கு அறிவித்திருந்தது.
தற்பொழுது இலங்கையின் பாதுகாப்பு நிலைமை வழமை நிலைக்கு திரம்பியிருப்பதாக அந்நாட்டு வெளிநாட்டு அலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் இலங்கைக்கான சுற்றுலா பயணத்தின் போது அவதானத்துடன் செயற்படுமாறு சுவிட்ஸ்லாந்து வெளிநாட்டு அலுவல்கள் திணைக்களம் அந்நாட்டு பிரஜைகளிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
பகிரவும்...