இந்தோனேசிய தலைநகரை மாற்றத் தீர்மானம்!
இந்தோனேசிய தலைநகரை மாற்றுவதற்கு தீர்மானித்துள்ளதாக இந்தோனேசிய ஜனாதிபதி ஜோக்கோ விட்டோ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை கூட்டத்தின் நிறைவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிக்கே தலைநகரை மாற்ற தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் புதிய தலைநகராக எதனை தெரிவு செய்வது என்பது குறித்த தீர்மானம் இதுவரையில் எட்டப்படவில்லை எனவும் ந்தோனேசிய ஜனாதிபதி ஜோக்கோ விட்டோ கூறியுள்ளார்.
இதேவேளை, தலைநகரை மாற்றுவதற்கு 10 ஆண்டுகள் வரை செல்லலாம் என இந்தோனேசிய அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.