Main Menu

இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த உடன்படிக்கை பேச்சுவார்த்தை இன்று

இந்திய இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் பாகிஸ்தான் இராணுவ தலைமை இயக்குநர்கள் இடையே யுத்த நிறுத்த உடன்படிக்கை தொடர்பான பேச்சுவார்த்தை இன்று (12) நண்பகல் 12 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை
அடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் ஒபரேசன் சிந்தூர் என்ற பெயரில் தாக்கி அழித்திருந்தது.

இதனை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்தது. இந்நிலையில், அமெரிக்க ஜளாதிபதி டொனால்ட் டிரம்ப் தலையீட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியான போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்தன.

எனினும் இருநாடுகளும் ஒப்புதலை மீறி எல்லையில் தாக்குதல்களை மேற்கொண்டிருந்த நிலையில் இந்திய இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் பாகிஸ்தான் இராணுவ தலைமை இயக்குநர்கள் இடையே போர் நிறுத்த உடன்படிக்கை தொடர்பான பேச்சுவார்த்தை ஒன்று இன்று (12) நண்பகல் 12 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை, கடந்த சனிக்கிழமை இரவு 11 மணிக்கு பின்னர் எல்லைப்பகுதிகளில் எந்த தாக்குதலும் நடைபெறாத நிலையில் போர் நிறுத்த உடன்படிக்கை வெற்றி பெறுமென எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...
0Shares