Main Menu

இந்தியாவின் 76 ஆவது குடியரசு தின நிகழ்வுகளில் பங்குபற்ற பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு அழைப்பு

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகருக்கும், பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது, இந்தியாவின் 76 ஆவது குடியரசு தின நிகழ்வுகளில் பங்குபற்ற பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...
0Shares