இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு இலங்கையிலும் சிறப்பு நிகழ்வுகள்
இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்திலும் சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன.
குறித்த நிகழ்வில் யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ், இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தியுள்ளார்.
மேலும் பலாலியிலுள்ள இந்திய அமைதிப்படையினரின் நினைவிடத்தில் ராகேஷ் நட்ராஜ், மலர்தூவி மரியாதை செய்தார்.
இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்த யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் கொடித்துவக்கும் இந்திய அமைதிப்படையினருக்கு மரியாதை செலுத்தினார்.