ஆளுநருக்கும் முன்னாள் முதலமைச்சருக்குமிடையில் சந்திப்பு
ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்குமிடையில் சந்திப்பொன்று நேற்று (10) பிற்பகல் இடம்பெற்றது.
இதன்போது ஈஸ்டர் தினத்தில் நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களுக்கு பின்னர் வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பிலும் அண்மையில் கைது செய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது