அ.தி.மு.க.வை அழிவு பாதையை நோக்கி கொண்டுச் செல்வதற்கு அனுமதிக்க மாட்டேன்- சசிகலா
அ.தி.மு.க.வை அழிவு பாதையை நோக்கி கொண்டுச் செல்வதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் என அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா தெரிவித்துள்ளார்.
நேற்று (திங்கட்கிழமை) மதுரையை சேர்ந்த குபேந்திரன் என்ற ஆதரவாளரிடம் தொலைபேசி ஊடாக சசிகலா, கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது சசிகலா மேலும் கூறியுள்ளதாவது, “தொண்டர்கள் அனைவரும் என்னுடனே இருக்கின்றனர்.
ஆகவே அவர்களை விரைவில் சந்திக்க தீர்மானித்துள்ளேன். எம்,ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் காலத்தில் அவர்களுடன் இருந்திருக்கின்றேன்.
மேலும் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளை கூட அவருடன் இருந்து நானும் எதிர்கொண்டுள்ளேன்.
எனவே அ.தி.மு.க.வை ஒருபோதும் அழிவு பாதையை நோக்கி கொண்டுச் செல்லமாட்டேன். ஜெயலலிதா போல நாமும் தொண்டர்களுடன் இருந்து ஆட்சியைக் கைப்பற்றுவோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.