அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் சுகாதார கல்வி கண்காட்சி, விழிப்புணர்வு நடைப்பயணம்

“சமூக மற்றும் சுகாதார தொலைநோக்கு – 2025″ சுகாதார கல்வி கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு நடைப்பயணம் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் இன்று (07) இடம்பெற்றது.
மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காக பொதுமக்களுக்கு சமூக சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .
இதன்போது சுதந்திர சதுக்க வளாகத்திலிருந்து அணிவகுப்பு பேரணி ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் விஹார மகாதேவி பூங்காவில் நிறைவடைந்தது .
இதனையடுத்து விஹார மகாதேவி பூங்காவில் சுகாதார கல்வி கண்காட்சி இடம்பெற்றது.
கண்காட்சியில் கல்வி அரங்குகள், குழந்தைகள் கலை கண்காட்சிகள், ஆரோக்கியமான உணவு அரங்குகள் மற்றும் இலவச சுகாதார திரையிடல்கள் ஆகியவை உள்ளடக்கப்பட்டிருந்தன.
விஹார மகாதேவி பூங்காவில் வெளிப்புற அரங்கில் இன்று இரவு வரை கல்வி மற்றும் கலாச்சார நிகழ்வுகளுக்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க, சமூக மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் நிபுணர் கபில ஜெயரத்ன, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர்கள், துணை இயக்குநர்கள், சமூக மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் உறுப்பினர்களான சிறப்பு மருத்துவர்கள், மருத்துவர்கள், சர்வதேச அமைப்புகள் மற்றும் உள்ளூர் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் பிரதிநிதிகள், பல்கலைக்கழகங்கள், பாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பகிரவும்...