அடுத்த வாரம் முதல் பாடசாலைகள் திறப்பு
அடுத்த வாரம் முதல் பாடசாலைகள் முழுமையாக செயற்படும் என கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன அறிவித்துள்ளார்.
நாடளுமன்றில் இன்று (திங்கட்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
தற்போது, ஆரம்ப பாடசாலைகள் மற்றும் தரம் 10, 11, 12 மற்றும் 13 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கற்பித்தல் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக பல மாதங்கள் மூடப்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள பாடசாலைகள் அடுத்த வாரம் முதல் முழுமையாக செயற்படும்.