Marseille (16) நகரத்தில் காட்டுத்தீ பரவியது

இன்று காலை Pennes-Mirabeau (Bouches-du-Rhône) (Marseille) நகரத்தில்,காட்டுத்தீ பரவியது. மகிழூந்து ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக, அந்த வாகனத்தின் தீயில் இருந்து பரவிய காட்டுத்தீ வேகமாகப் பரவியது. இச் சம்பவம் காலை 10.50 மணியளவில் ஏற்பட்டது.
இத் தீயானது மார்செயில் நகரத்தின் வடக்குப் பகுதியில் (16வது மாவட்டம்) உள்ள மலைகளையும் வீடுகளையும் நோக்கிப் பரவியுள்ளது. 700 ஹெக்டேருக்கு மேல் நிலப்பரப்பு தீயால் பாதிக்கப்பட்டுள்ளது.
வீட்டிலேயே தங்குங்கள் என அரசாங்கம் அப்பகுதி மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது – ஜன்னல்கள், கதவுகள் அனைத்தையும் மூட வேண்டியது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
500க்கும் மேற்பட்ட தீயணைப்பு படையினர் மற்றும் கனடாயர் (Canadair) விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஆகியவை தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
மார்செயில் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. மற்றும் மார்செய் நகரிலிருந்து வடக்கு மற்றும் மேற்கு திசைகளுக்கு செல்லும் மற்றும் வரும் அனைத்து தொடருந்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. பயணத்தை ஒத்திவைக்கவும், நிலையங்களுக்குச் செல்ல வேண்டாம்.’ எனப் பயணிகள் பணிக்கப்பட்டுள்ளனர்.
Bouches-du-Rhône ஆணையர் தெரிவித்ததன்படி, ‘பத்து வீடுகளுக்கும் அதிகமானவை தீயால் நாசமாகியுள்ளன.’
மார்செயில் 16வது மாவட்டம் அல்லது அதன் அருகாமையில் வசிக்கும் மக்கள் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்கவும் , வாகனத்தில் பயணம் செய்ய வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகின்றனர்.
முக்கிய நெடுஞ்சாலைகள் (A55, A50) மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பகிரவும்...