இலங்கை
மறுமலர்ச்சி நகரம்- மன்னார் நானாட்டான் பகுதியில் மரம் நடுகை நிகழ்வு முன்னெடுப்பு

வளமான நாடும் அழகான வாழ்க்கையும் மறுமலர்ச்சி நகரம் என்ற தொனிப்பொருளில் உள்ளூராட்சி வாரம் இன்று முதல் எதிர்வரும் 21ம் திகதி வரை தேசிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இன்றைய இரண்டாவது நாள் சுற்றாடல் மற்றும் மரம்நடுகை தினமாகும். அதற்கமைய நானாட்டான் பிரதேச சபையால்மேலும் படிக்க...
செப்டெம்பர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் 75,000 இற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை
சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. செப்டெம்பர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் 75,358 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து மாத்திரம் 21,389 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர், பிரித்தானியாவிலிருந்துமேலும் படிக்க...
மனித கடத்தலில் பாதிக்கப்பட்ட 06 பேர் கடற்படையினரால் மீட்பு

இலங்கை கடற்படை கடந்த 13 ஆம் திகதி தலைமன்னார், மணல்திட்டு கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கடத்தப்பட்டு கடல் வழியாக ஆட்கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆறு (06) இலங்கையர்களை மீட்டுள்ளனர். கடல் வழிகள் வழியாக சட்டவிரோதமேலும் படிக்க...
சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ள மின்சாரசபை தொழிற்சங்கங்கள்
இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாக பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்சார தொழிற்சங்கங்களால் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு அமைய, மின் தடை புதுப்பிப்பு, கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட செயற்பாடுகள் கடமை நேரங்களில் மாத்திரமே முன்னெடுக்கப்படும் என பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள மின்சார தொழிற்சங்கங்கள்மேலும் படிக்க...
உலக வங்கியின் பிரதிநிதிகளை சந்தித்த ஜனாதிபதி

உலக வங்கி குழுமத்தின் தெற்காசிய பிராந்தியத்திற்கான உப தலைவர் ஜோஹன்னஸ் ஸட் (Johannes Zutt) உள்ளிட்ட உலக வங்கி குழும பிரதிநிதிளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள உலக வங்கி குழுவின் தெற்காசிய பிராந்தியத்திற்கானமேலும் படிக்க...
கிளிநொச்சி மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த காணிகள் விடுவிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த முப்பது ஏக்கர் வரையான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. கடந்த 2009 ஆண்டு தொடக்கம் பாதுகாப்பு படையினர் வசமிருந்த தனியார் மற்றும் அரச காணிகள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டு வந்துள்ளன. அதன் தொடர்சியாக கிளிநொச்சி மாவட்டத்தின் பூனகரிமேலும் படிக்க...
60 ஆண்டுகளுக்கு பின்னர் புதுப்பிக்கப்படும் புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம்

பல தசாப்தங்களுக்குப் பிறகு, கொழும்பில் உள்ள புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தை புதுப்பிக்க தற்போது ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. 60 ஆண்டுகளுக்குப் பின்னர் பேருந்து நிலையம் முழுமையாக புதுப்பிக்கப்பட்டு வருகிறது. புதுப்பித்தலுக்கான செலவு 424 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. புறக்கோட்டைக்குமேலும் படிக்க...
மித்தேனியவில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனம் ஐஸ் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பொருள் என உறுதி

மித்தேனியவில் உள்ள ஒரு நிலத்தில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனப் பொருள், மெத்தம்பேட்டமைன் (ICE) உற்பத்தியில் பயன்படுத்தப்படும் பொருள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மித்தேனியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனங்கள் குறித்து தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை (NDDCB) தனது அறிக்கையை பொலிஸாரிடம் சமர்ப்பித்த பின்னர்மேலும் படிக்க...
தமிழரசு கட்சி வாக்களிக்காதது தவறான முடிவு – சாணக்கியன்

முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை குறைக்கும் சட்டமூலத்திற்கு இலங்கை தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவரே வாக்களிக்கத் தேவையில்லை என தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நேற்று (13) மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதுமேலும் படிக்க...
நீதி, சமத்துவத்துவத்தை கட்டியெழுப்ப அனைத்து மதங்களுக்கு இடையேயான ஒற்றுமை அவசியம் – பிரதமர்
நாட்டில் நல்லிணக்கத்தையும், நீதியையும், சமத்துவத்தையும் நிலைநாட்டுவதற்கு, சகல மதங்களுக்கு இடையிலும் நல்லுறவையும் சகோதரத்துவத்தையும், அன்பையும் முன்னுதாரணமாகக் கொண்டிருப்பது மிகவும் அவசியமாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். வரலாற்றுச் சிறப்புமிக்க மாத்தறை எமது அன்னை ஆலயத்தின் 118-வது வருடாந்த பெருவிழாவில்மேலும் படிக்க...
மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் – பெஃப்ரல் அமைப்பு வலியுறுத்தல்

நீண்ட காலமாகத் தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தலை நடத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பெஃப்ரல் அமைப்பு (PAFFREL) அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டு விவகாரங்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்னவுக்கு அனுப்பிய கடிதத்தில், பெஃப்ரல்மேலும் படிக்க...
இரண்டு வாரங்களுக்குள் ஜெனிவாவில் இலங்கை தொடர்பான முக்கிய வரைவுத் தீர்மானம்?

இலங்கை, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ் இருக்கும் வகையில் வரைவுத் தீர்மானம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதன்படி, மனித உரிமைகள் பேரவையின் அதிகாரத்தை நீடிக்கும் வரைவுத் தீர்மானம், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் ஜெனீவாவில் உள்ளமேலும் படிக்க...
உலகளாவிய ஜனநாயக தரப்படுத்தலில் இலங்கை 15 இடங்கள் முன்னேற்றம்

உலகளாவிய ஜனநாயக செயல்திறனில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. அதன்படி, சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் உதவி நிறுவனம் வெளியிட்ட உலகளாவிய ஜனநாயக நிலை 2025 அறிக்கையின் பிரதிநிதித்துவ பிரிவில் இலங்கை 15 இடங்கள் முன்னேறியுள்ளது. 2024 ஆம் ஆண்டில் அமைதியானமேலும் படிக்க...
ரத்தன தேரருக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அத்துரலியே ரத்தன தேரரை பிணையில் செல்ல அனுமதித்து நுகேகொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று (12) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரத்தன தேரரை தலா 500,000 ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகள் மற்றும் 10,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும்மேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குறித்து விவாதத்தை நடத்த சந்தர்ப்பம் தாருங்கள் – சஜித்
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குறித்து விவாதத்தை நடத்த சந்தர்ப்பம் தாருங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் கோரிக்கை ஒன்றை முன்வைத்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “சபாநாயகர் நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக முன்வைத்த விடயங்கள்மேலும் படிக்க...
கிளிநொச்சியில் இரண்டு உணவுக் கடைகள் தற்காலிக மூடல்

நாச்சிக்குடா பகுதியில் சுகாதார சீர் கேட்டுடன் இயங்கிவந்த இரண்டு உணவு கடைகள் கிளிநொச்சி நிதிமன்றத்தின் கட்டளையோடு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கிளிநொச்சி முழங்காவில் பொதுசுகாதார பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட நாச்சிக்குடா பகுதியில் சீர் கேட்டுடன் இயங்கிவந்த இரு உணவகங்களுக்கும் 65,000 ரூபா தண்டப் பணம்மேலும் படிக்க...
பொதுஜன பெரமுனவினால் , சீன நிறுவனத்திற்கு 10.3 பில்லியன் ரூபா நிதி வழங்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது

”பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட முறையற்ற அபிவிருத்தி திட்டங்கள் காரணமாக, சீன நிறுவனத்திற்கு 10.3 பில்லியன் ரூபா நிதி வழங்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக” வீடமைப்பு அபிவிருத்தி பிரதி அமைச்சர் டி.பி.சரத் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து வீடமைப்புமேலும் படிக்க...
ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார் சீனத் தூதுவர்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சீன தூதுவர் குய் ஜென்ஹோங் சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பு கொழும்பு மலர் வீதியில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. அண்மையில் கைது செய்யப்பட்டிருந்த ரணில் விக்கிரமசிங்க உடல் நல குறைவு காரணமாகமேலும் படிக்க...
பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 72 பேருக்கு எதிராக சிவப்பு அறிவித்தல்

நாட்டில் இடம்பெற்ற குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள நிலையில் பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 72 பேருக்கு எதிராக சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- …
- 469
- மேலும் படிக்க

