இலங்கை
பேரிடரால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

நிலச்சரிவுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பாதிப்புகள் காரணமாக சுமார் 1,289 வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சுமார் 44,500 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. ஜனாதிபதி திசாநாயக்கவிற்கும், நிதி அமைச்சு மற்றும் தேசியமேலும் படிக்க...
பேரிடரால் உயிரிழந்த கால்நடைகள்!! கோழி இறைச்சி குறித்து ஹரின் பெர்னாண்டோ எச்சரிக்கை

அண்மையில் ஏற்பட்ட பேரிடரின் போது உயிரிழந்த கால்நடைகளின் இறைச்சி மற்றும் முட்டைகள் சந்தைக்கு வந்தால் ஏற்படக்கூடிய உடல்நல அபாயங்கள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஹரின் பெர்னாண்டோ எச்சரித்துள்ளார். இந்நிலையில், பொது சுகாதார நெருக்கடியைத் தடுக்க அரசாங்கம்மேலும் படிக்க...
யாராலும் அற்புதங்களை செய்ய முடியாது: எதிர்க்கட்சியின் நடவடிக்கை அபத்தமானது – சரத் பொன்சேகா

பேரழிவைத் தடுக்கத் தவறியதற்காக அரசாங்கத்தின் மீது வழக்குத் தொடர எதிர்க்கட்சியின் நடவடிக்கை அபத்தமானது என்றும், முந்தைய ஆட்சியாளர்கள் ஆட்சியில் இருந்தாலும் நிலைமை அப்படியே இருக்கும் என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறினார். கடந்த காலங்களில் வெள்ளம்மேலும் படிக்க...
அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவுகளை வழங்கும் வரமக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் – சிரேஷ்ட ஆய்வாளர்

அதிகாரிகள் வந்து, என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெளிவாகத் தெரிவித்து, தமது முடிவை வழங்கும் வரை, அதாவது வீடுகளுக்குச் செல்ல முடியும் என்பதை உறுதிப்படுத்தும் வரை, மிகவும் பாதுகாப்பற்ற இடங்களில் உள்ள மக்கள் அந்த இடங்களுக்குத் திரும்ப வேண்டாம். அதிக மழைமேலும் படிக்க...
நீர் சுத்திகரிப்புக்காக 25,000 கிலோகிராம் குளோரினை வழங்கிய யுனிசெஃப்

நாடு அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில் கிராமப்புற சமூகங்களுக்கு பாதுகாப்பான குடிநீரை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. நீர் சுத்திகரிப்புக்காக சுமார் 25,000 கிலோகிராம் குளோரினை யுனிசெஃப் வழங்கியுள்ளது. இந்த உதவி இது 500,000 குடும்பங்களுக்கு போதுமானது என தெரிவிக்கப்படுகிறது. கடுமையாக பாதிக்கப்பட்டமேலும் படிக்க...
முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க கைது

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க இன்று (02) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று முற்பகல் அவர் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்தார். ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்படும் விசாரணை ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கவே அவர் ஆஜரான நிலையில் இலஞ்சம்மேலும் படிக்க...
யாழில். பட்டப்பகலில் இளைஞன் கொலை – சிறைக்குள் தீட்டப்பட்ட திட்டம்

யாழ்ப்பாணத்தில் பட்டப்பகலில் இளைஞன் ஒருவனை வீதியில் துரத்தி துரத்தி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 06 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் இருவர் தலைமறைவாகியுள்ளனர். கைதானவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், கொலை சம்பவம் சிறையில் தடுத்துமேலும் படிக்க...
பேரிடர்களால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 410 ஆக அதிகரிப்பு

நாட்டில் ஏற்பட் பேரிடர்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 410 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட பேரிடரட்களால் 407,594 குடும்பங்களைச் சேர்ந்த 1.4 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 565 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும்,மேலும் படிக்க...
ஜனாதிபதியிடம் தொலைபேசியில் உரையாடிய இந்திய பிரதமர்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை தொலைபேசியில் நேற்று தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார். ‘டிட்வா’ புயலை தொடர்ந்து இலங்கையில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு இரங்கல் வௌியிட்ட அவர் அதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இந்தியப் பிரதமர் தமது கவலையைமேலும் படிக்க...
பேரிடர் குறித்து பொது மக்களுக்கான விசேட அறிவிப்பு

நாட்டில் பேரிடர் ஏற்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறங்கள் குறித்து அவதானமாக செயற்படுமாறு இலங்கை பொலிஸ் வலியுறுத்தியுள்ளது. மின்சாரம் மற்றும் எரிவாயு பாதுகாப்பு குறித்து விசேட கவனம் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, மின் மூலங்களை அணுகுவதற்கு முன்னர் உத்தியோகப்பூர்வ மின் தொழில்நுட்பமேலும் படிக்க...
டித்வா புயல் தாக்கம் – உயிரிழப்புகள் 390 ஆக அதிகரிப்பு

நாட்டில் டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 390 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் 352 பேரை காணவில்லை எனவும் அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.மேலும் படிக்க...
இலங்கைக்கான அவசர நிவாரண உதவியை வழங்கும் பிரித்தானியா

டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட பேரழிவில் இருந்து இலங்கை மீள்வதற்காக பிரித்தானியாவும் அவசர நிவாரண நிதியை வழங்குவதாக அறிவித்துள்ளது. அதற்கமைய 890,000 அமெரிக்க டொலர் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிதியானது செஞ்சிலுவைச் சங்கம் ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான அமைப்பு மற்றும்மேலும் படிக்க...
நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப நீண்டகால வலுவான நிதியம்

அனர்த்த நிலைமைக்குப் பிறகு சேதமடைந்த நெடுஞ்சாலைகள் மற்றும் நீர்ப்பாசன கட்டமைப்புகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கத்தில் நிதி திரட்டுவதற்காக அரச மற்றும் தனியார் துறைகளை இணைத்து மத்தியதர மற்றும் நீண்ட கால வேலைத்திட்டமொன்றைத் தொடங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.மேலும் படிக்க...
பேரிடர் நிலைமை தொடர்பாக அரசாங்கத்திற்கு எதிராக குற்றவியல் வழக்கு

இலங்கையில் தற்போதைய பேரிடர் நிலைமை தொடர்பாக அரசாங்கத்திற்கு எதிராக குற்றவியல் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் S.M. மரிக்கார் ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் கூறியுள்ளார். இந்த பேரிடர் நிலைமைமேலும் படிக்க...
அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 355 ஆக அதிகரிப்பு

நாட்டில் டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 355 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 366 பேர் காணாமற்போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வெள்ளம் மற்றும் மண்சரிவுகள்மேலும் படிக்க...
வெலிமடை, ரேந்தபொல பிரதேசத்தில் நேற்று இரவு ஏற்பட்ட பயங்கர மண்சரிவில் ஒன்பது பேர் மாயம்

மீட்கப்பட்ட *மெக்சிகோ மற்றும் ஆர்ஜென்டீனா பெண்கள் உள்ளிட்டவர்கள் சமரவீரபுர பள்ளிவாசலில் தங்கவைப்பு வெலிமடை, ரேந்தபொல பிரதேசத்தில் நேற்று இரவு ஏற்பட்ட பயங்கரமான மண்சரிவில் ஒன்பது பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மண்சரிவு ஏற்பட்டதும் இராணுவத்தினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று விரைவாகமேலும் படிக்க...
இலங்கைக்கு 100,000 அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கியது சீனா

டிட்வா புயலால் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியதை அடுத்து,சீன அரசாங்கம் இலங்கைக்கு 100,000 அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. சீன செஞ்சிலுவை சங்கம் அவசர நிதி உதவியாக 100,000 அமெரிக்க டொலர் தொகையைமேலும் படிக்க...
நிலவிய மோசமான வானிலை காரணமாக நிறுத்தப்பட்ட பொதுப் போக்குவரத்து சேவை இயல்பு நிலைக்கு திரும்பியது

நாட்டில் கடந்தவாரம் நிலவிய மோசமான காலநிலை மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் முழுமையாக ஸ்தம்பிதமடைந்த பொது போக்குவரத்து சேவை தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. கொழும்பு – யாழ்ப்பாணம் பேருந்து போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், கரையோர வீதி,பிரதான வீதி,புத்தளம் வீதி மற்றும்மேலும் படிக்க...
குடிநீர் தொடர்பில் மக்களுக்கு அவசர எச்சரிக்கை

வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளில் உள்ள கிணற்று நீரைப் பருகுவதைத் தவிர்க்குமாறு சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குட தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
வெளிநாட்டு உதவியை நிர்வகிக்க அவசர ஒருங்கிணைப்புப் பிரிவு

வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கான நிவாரண சேவைகளை நிர்வகிப்பதற்கும் ஒழுங்குபடுத்துவதற்கும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு இணைந்து அவசர ஒருங்கிணைப்புப் பிரிவை நிறுவியுள்ளது. வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்கள், இலங்கையில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திர நிறுவனங்கள்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- …
- 405
- மேலும் படிக்க
