இலங்கை
கொட்டாஞ்சேனை-யில் இரு பெண்களுடன் கடத்திச் செல்லப்பட்ட கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு
நபரொருவரால் கொட்டாஞ்சேனையில் கடத்திச்செல்லப்பட்ட கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளனர். நேற்று சனிக்கிழமை (12) இரவு கொட்டாஞ்சேனையின் வாசல வீதியில், இயங்கும் நிலையில் தனது காரை நிறுத்திவிட்டு, உணவு வாங்குவதற்காக உணவகத்திற்குள் காரின் உரிமையாளர் சென்றுள்ளார். காரில் கர்ப்பிணியான மனைவியையும்மேலும் படிக்க...
ஊழல் ஒழிப்பில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்புக்கு பாராட்டு – சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய
நாட்டின் துரித முன்னேற்றத்துக்கு இடையூறாக உள்ள இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிக்கும் நோக்கில் தேசிய ஊழல் ஒழிப்பு செயற்திட்டமொன்றை வெளியிடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதையும், அதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமைத்துவம் வழங்கி செயற்படுவதையும் பெரிதும் வரவேற்பதாக சமூக நீதிக்கான தேசியமேலும் படிக்க...
கிராமிய மக்களை தேசிய பொருளாதாரத்தில் ஈடுபடுத்த தேவையான முதலீடுகளை கிராமங்களுக்குக் கொண்டு வர அரசாங்கம் நடவடிக்கை – பிரதமர் ஹரிணி
நாட்டின் அனைத்து பகுதிகளிலும் புதிய திட்டங்களை ஆரம்பித்து, கிராமிய மக்களை தேசியப் பொருளாதாரத்தில் ஈடுபடுத்த தேவையான முதலீடுகளை கிராமங்களுக்குக் கொண்டு வர அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். மன்னார் நானாட்டான் பகுதியில் சனிக்கிழமைமேலும் படிக்க...
வெளிநாட்டு பணவனுப்பல் 18 சதவீதத்தினால் அதிகரிப்பு
கடந்த மார்ச் மாதத்தில் வெளிநாட்டு பணியாளர்களின் பணவனுப்பல் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதற்கமைய கடந்த மார்ச் மாதத்தில்வெளிநாட்டு பணவனுப்பல் 693.3 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 18 சதவீதம் அதிகரிப்பாகும்மேலும் படிக்க...
நிராகரிக்கப்பட்ட மேலும் சில வேட்புமனுக்களை மீள ஏற்றுக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு
நிராகரிக்கப்பட்ட சுமார் 35 வேட்பு மனுக்களை மீண்டும் ஏற்றுக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமாதான நீதவான் பிறப்பு சான்றிதழை சான்றுப்படுத்தல் மற்றும் அரசியலமைப்பின் 07 ஆவது உப பிரிவின் கீழ் எடுக்கப்பட்ட சத்தியப்பிரமாணம் தொடர்பில் எழுந்த சிக்கல்கள் காரணமாக நிராகரிக்கப்பட்டமேலும் படிக்க...
அதிவேக நெடுஞ்சாலைகளில் இலத்திரனியல் அட்டை, QR code ஊடாக கட்டணம் செலுத்தும் வசதி
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிப்பதற்காக இலத்திரனியல் அட்டைகள் (debit card & credit card) மற்றும் QR code ஊடாக கட்டணங்கள் செலுத்தும் வசதிகளை ஏற்படுத்துவதற்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது. இலத்திரனியல் அட்டைகளினூடாக கொடுக்கல்மேலும் படிக்க...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைத்துப்பாக்கி மற்றும் 12 தோட்டாக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேறும் பகுதியில் கடமையில் இருந்த அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (09) இரவு இந்த நபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப்மேலும் படிக்க...
ஊழலுக்கு எதிராகச் சட்டத்தை நடைமுறைப் படுத்துவது அரசியல் பழிவாங்கல் அல்ல, மனிதாபிமான கடமை – ஜனாதிபதி வலியுறுத்து
கையூட்டல் மற்றும் ஊழல் குற்றங்களிலிருந்து அரசியல் பொறிமுறையை மீட்டெடுக்க தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதால் அதிகாரிகளும் விரைவில் சரியான பாதைக்குத் திரும்ப வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ‘தேசிய ஊழல் எதிர்ப்புமேலும் படிக்க...
ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமானது சர்வகட்சி கூட்டம்
ஜனாதிபதி தலைமையில் சர்வகட்சி கூட்டம் ஆரம்பமாகியது. அமெரிக்காவின் வரி அறிவிப்பு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் சர்வகட்சி கூட்டம் நடைபெறுகிறது. ஜனாதிபதி செயலகத்தில் குறித்த கூட்டம் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் வரி அறிவிப்பு தொடர்பாக அரசாங்கம் இதுவரையில் மேற்கொண்டுள்ளமேலும் படிக்க...
மேர்வின் சில்வாவுக்கு ஏப்ரல் 21 ஆம் திகதிவரை விளக்கமறியல்
கிரிபத்கொடையில் உள்ள அரசுக்குச் சொந்தமான காணியை போலி ஆவணங்களை தயாரித்து தனியார் ஒருவருக்கு விற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் வழக்கின் மூன்றுமேலும் படிக்க...
மாகாணசபை தேர்தல் முடிந்ததும் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் – பிரதமர்
இலங்கைக்கான புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயல்முறையைத் தொடங்குவதற்கு முன், தற்போதைய அரசாங்கம் இரண்டு முன்னுரிமை விடயங்களைக் கருத்திற் கொண்டுள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று நாடாளுமன்றத்தில் வைத்துத் தெரிவித்தார். அரசாங்கம், பொருளாதாரத்தை உறுதிப்படுத்துவதிலும், தாமதமான தேர்தல்களை நடத்துவதன் மூலம் நாட்டில் ஜனநாயகத்தைமேலும் படிக்க...
அமெரிக்காவின் வரி விதிப்பு – ஜனாதிபதி தலைமையில் சர்வகட்சி மாநாடு
அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு இலங்கையிலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாய நிலைகள் உருவாகியுள்ளன. கடந்த 2ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அறிவிப்பின் பிரகாரம் இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு 44 சதவீத வரி விதிக்கப்பட்டது. இந்தமேலும் படிக்க...
சிறார்கள் மத்தியில் தொடர்ந்து அதிகரித்துவரும் மந்தபோசணை – உலக உணவுத்திட்டம்
இலங்கையில் 5 வயதுக்குக் குறைந்த சிறுவர்களில் வயதுக்கு ஏற்ற எடை மற்றும் உயரம் இன்மையினால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை கடந்த 5 வருடங்கள் தொடர்ச்சியாக அதிகரித்துள்ளது. இது கரிசனைக்குரிய அளவில் மந்தபோசணை அதிகரித்துவருவதையும், போதியளவு போசணையைப் பெற்றுக்கொள்வதில் நிலவும் இடைவெளியையும் காண்பிப்பதாகமேலும் படிக்க...
பாடசாலைகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின இவ்வாண்டுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி செயற்பாடுகள் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடையவுள்ளது. அதற்கமைய முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சுமேலும் படிக்க...
மியன்மாரில் அனர்த்த நிவாரணப் பணிகளை ஆரம்பித்துள்ள இலங்கை முப்படையினர்
மியன்மாரில் சமீபத்தில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அனர்த்த நிவாரண மீட்புப் பணிகளுக்கு உதவ அனுப்பப்பட்ட, முப்படைப் வீரர்களைக் கொண்ட சிறப்பு மனிதாபிமான உதவி மற்றும் நிவாரணக் குழு, மியான்மாரில் நிவாரண பணிகளை ஆரம்பித்துள்ளது. கடந்த திங்களன்று யங்கோன் சர்வதேச விமானமேலும் படிக்க...
நிபந்தனைகளை தளர்த்த முடியாது ; பின்பற்றாவிடின் ஜி.எஸ்.பி. சலுகையை இழக்க நேரிடும் ; பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் – ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்
ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகை இலங்கைக்கு வேண்டுமானால் ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்திருக்கிற நிபந்தனைகளை இலங்கை பின்பற்றியாக வேண்டும். இணக்கப்பாடுகளை நிறைவேற்றியாக வேண்டும். இல்லாவிடின், ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகை இலங்கைக்கு கிடைக்காமல் போய்விடும் என்று இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கார்மென்மேலும் படிக்க...
பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படுமா? ஆராய விசேட குழு நியமனம்
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ரத்து செய்வது குறித்து ஆராய விசேட குழுவை நியமிக்க அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், பயங்கரவாதத்மேலும் படிக்க...
சி.ஐ.டியிலிருந்து வெளியேறினார் கெஹலிய ரம்புக்வெல்ல
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல வாக்குமூலம் வழங்கிய பின்னர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார். தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று புதன்கிழமை (09)மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 124
- 125
- 126
- 127
- 128
- 129
- 130
- …
- 469
- மேலும் படிக்க
