இலங்கை
இன, மத, கட்சி பேதம் இன்றி அனைவரும் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக செயற்பட வேண்டும் – பிரதமர்!
அனைத்து மக்களும் இன, மத, கட்சி பேதம் இன்றி சுகாதார அமைச்சு விடுக்கும் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக செயற்பட வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் நேற்றுமேலும் படிக்க...
தகுதியற்றவர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!
ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரத்தை தகுதியற்றவர்களுக்கு வழங்கும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார். ஊரடங்கு அனுமதிப்பத்திரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளமை தொடர்பாக அதிகளவானமேலும் படிக்க...
இலங்கை ‘3A’ என்ற கட்டத்தில் இருந்து ‘3B’ இற்குச் சென்றால் பெரும் ஆபத்து- மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!
உலக சுகாதார ஸ்தாபனத்தின் வகைப்படுத்தலுக்கு அமைய கொரோனா வைரஸ் பரவலில் இலங்கை ‘3A’ என்ற கட்டத்திலுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் தற்போது முறையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் எதிர்வரும் இரு வாரங்களில் அபாயகரமான அடுத்தடுத்த கட்டங்களுக்குச் செல்ல நேரிடும்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கையில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 148 அதிகரித்துள்ளது. இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 27 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் மூவர்மேலும் படிக்க...
நிர்பீடனம் குறைந்தவர்களை இலகுவாகத் தாக்கும் கொரோனா: வைத்திய நிபுணரின் முக்கிய அறிவிப்பு
கொரோனா வைரஸ் நிர்பீடனம் குறைந்தவர்களை இலகுவாகத் தாக்கும் எனவும் சிறுநீரக நோய்கள் நிர்ப்பீடனக் (நோயெதிர்ப்பு) குறைவுக்கு ஒரு பிரதான காரணம் என்றும் சிறுநீரக சத்திர சிகிச்சை நிபுணர் தேவராஜா அரவிந்தன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவர் குறிப்பிடுகையில், “இன்று நாட்டிற்குப் பெரும்மேலும் படிக்க...
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மூவர் குணமடைந்தனர்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் நோயாளிகள் குணமடைந்துள்ளவும் அதன்படி இதுவரை 21 பேர் குணமடைந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் கிரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ள சந்தேகத்தில் 231 பேர் சிகிச்சைபெற்றுவருவதுடன் 146 நோய்தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில்மேலும் படிக்க...
கொரோனா தொற்றினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 143 ஆக அதிகரிப்பு!
நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 143 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்றைய தினம்(செவ்வாய்கிழமை) மாத்திரம் 21 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், 17 பேர் முழுமையாக குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், 173 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும்மேலும் படிக்க...
யாழ்ப்பாணம், கொழும்பு தவிர்ந்த சில இடங்களில் தளர்த்தப்பட்டது ஊரடங்கு!
நாட்டின் சில பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று(புதன்கிழமை) காலை 6 மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளிலேயே இந்த ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு தளர்த்தப்பட்டுள்ளமேலும் படிக்க...
யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தியின் எச்சரிக்கை!
அளவுக்கு அதிகாமாக நோய் பற்றிய செய்திகளையும் வீடியோக்களையும் பார்வையிடுதல் மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடும் என யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், “ஒருநாளில் ஒருசில தடவைகள் மாத்திரம் இந்நோய் நிலை பற்றிய தகவல்களுக்காக நம்பிக்கையான வலைத்தளங்களைப்மேலும் படிக்க...
எட்டு வீத மாணவர்களின் தொடர்புகள் இல்லை – கல்வியமைச்சர்
கொரோனா வீச்சினால், கடந்த 16 திகதியிலிருந்து பாடசாலைகள் மூடப்பட்டு, உள்ளிருப்புக் கட்டுப்பாட்டுக் காலத்தில், மாணவர்களிற்கு இணையவழிப் பாடங்கள் நேரடியாக வழங்கப்பட்டு வருகின்றன. மாணவர்களிற்கும் ஆசிரியர்களிற்கும் இடையிலான தொடர்புகள் உறுதிசெய்யப்பட்டுள்ளன. இந்த வீட்டிலிருந்த கல்விகற்கும் முறையில் (Ecole à la maison), கடந்த இரண்டுமேலும் படிக்க...
மட்டக்களப்பில் தனிமைப் படுத்தப்பட்ட 350 பேர் விடுவிப்பு!
கொரோனா தொற்று ஏற்படலாம் என்ற சந்தேகத்தில் வீடுகளில் தனிப்படுத்தப்பட்ட 350 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர்மேலும் படிக்க...
நாடளாவிய ரீதியில் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள அரசங்கம் தீர்மானம்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக நாடளாவிய ரீதியிலான பரிசோதனைகளை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர், வைத்தியர் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் வரையிலான காலப்பகுதியில், கொரோனா வைரஸ் தொற்றினால்மேலும் படிக்க...
நிவாரணப் பொருட்களை இலவசமாக வழங்குங்கள் – சஜித்
மக்களுக்கான நிவாரணப் பொருட்களை முற்றிலும் இலவசமாகவே பெற்றுக்கொடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான போராட்டத்தில் முன்நின்று செயற்படும் மருத்துவ சுகாதார சேவையாளர்களுக்கும்மேலும் படிக்க...
ஜூன் மாதம் பொதுத்தேர்தல் – வாசுதேவ நாணயக்கார நம்பிக்கை!
பொதுத்தேர்தலை ஜூன் மாதம் நடத்த எதிர்பார்த்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஏப்ரல் மாதம் இடம்பெறவிருந்த பொதுத்தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும்மேலும் படிக்க...
ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தும் பிரதேசங்கள் அரச உயர் மட்டத்திலேயே தீர்மானிக்கப் படுகின்றன – ஜனாதிபதி செயலகம்!
மக்களின் வாழ்க்கையை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் எந்தவொரு தீர்மானமும் பிரதேச மட்டத்தில் எடுக்கப்பட கூடாது என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் இன்று(திங்கட்கிழமை) காலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிடைக்கும் அனைத்து தரவுகளையும் பகுப்பாய்வுசெய்து ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தல்,மேலும் படிக்க...
வெளி நாட்டிலிருந்து வந்த மத போதகர் உட்பட 9 பேர் தனிமைப் படுத்தல்!
ஹற்றன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா-தரவளைப் பகுதியில் அமைந்துள்ள தேவாலயத்தின் மத போதகர் உட்பட ஒன்பது பேர் தேவாலயத்துக்குள்ளேயே நேற்று முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவில் இருந்து வருகைதந்திருந்த மதபோதகர் ஒருவருடன் இணைந்து ஆராதனைக் கூட்டம் நடத்தியமை, யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டமை ஆகியவற்றாலேயே குறித்தமேலும் படிக்க...
முல்லைத்தீவில் தொற்று நீக்கல் நடவடிக்கை!
கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நாளை (திங்கட்கிழமை) 6 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணி வரை ஊரடங்கு தளர்த்தப்படுவதால் புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்குட்பட்ட மக்கள் நடமாட்டம் அதிகமாகக் காணப்படும் பகுதிகளில் தொற்றுமேலும் படிக்க...
விரும்பியோ, விரும்பாமலோ நமது முன்னோர்கள் கடைப்பிடித்த விடயங்களை கடைப்பிடித்தே ஆக வேண்டும்!
விரும்பியோ, விரும்பாமலோ நமது முன்னோர்கள் கடைப்பிடித்த விடயங்களை கடைப்பிடித்தே ஆக வேண்டும் என கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றிஸ்வரர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்தக் குருக்கள் தெரிவித்தார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை குறித்து கருத்து வெளியிட்ட போதே அவர் இந்தமேலும் படிக்க...
வௌிநாடுகளில் உள்ள 700 இலங்கையர் மீண்டும் வர கோரிக்கை
வெளிவிவகார அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட ´கொன்டேக் ஸ்ரீலங்கா´ அதாவது இலங்கையை தொடர்பு கொள்ளுங்கள் என்ற இணையதளத்தின் மூலம் இதுவரை 17000 இலங்கையர்கள் தம்மை பதிவு செய்துக்கொண்டுள்ளனர். இந்த இணையத்தின் ஊடாக நேற்றைய தினம் நண்பகல் வரையில் சுமார் 17,457 பேர் பதிவு செய்துக்கொண்டுள்ளதாகவும்மேலும் படிக்க...
யாழ் சிறைச் சாலையிலிருந்து 110 கைதிகள் பிணையில் விடுதலை!
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து கடந்த சில தினங்களில் மட்டும் 110 கைதிகள் பிணையில் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடளாவிய ரீதியில் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை விடுதலை செய்து சிறையில் உள்ள நெருக்கடியைமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 346
- 347
- 348
- 349
- 350
- 351
- 352
- …
- 438
- மேலும் படிக்க
