Author: trttamilolli
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – தமிழக முதல்வர் அவசர கோரிக்கை

இலங்கை கடற்படையினரால் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்ட ஏழு ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு அவசரமாக இராஜதந்திர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில், தமிழகமேலும் படிக்க...
துமிந்தவுக்கு கடுமையான நிபந்தனைகளுடன் பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஹேவ்லாக் நகரில் உள்ள ஒரு சொகுசு வீட்டு வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கியின் உரிமை தொடர்பான விசாரணைகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர்மேலும் படிக்க...
பாகிஸ்தான் இராணுவத் தளபதி இலங்கைக்கு விஜயம்

பாகிஸ்தான் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் அசிம் முனீர் எதிர்வரும் 21 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இலங்கைக்கான மூன்று நாள் பயணத்திற்குப் பின்னர், அவர் இந்தோனேசியாவிற்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.. பாகிஸ்தானின் உயர் அதிகாரியான ஃபீல்ட் மார்ஷல் அசிம்மேலும் படிக்க...
முன் பிணை கோரி நீதிமன்றை நாடினார் ராஜித சேனாரத்ன
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தன்னை கைது செய்வதற்கு முன்னதாக, முன் பிணையில் விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன் பிணை கோரிக்கை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். மனுவை பரிசீலித்த பின்னர், எதிர்வரும் 18ஆம் திகதிமேலும் படிக்க...
இலங்கையும் சீனாவும் மூலோபாய ஒத்துழைப்பை வலுப்படுத்த இணக்கம்

மலேசியாவில் நடைபெற்ற ASEAN வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியாக, வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹெராத் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி (Wang Yi) இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலானமேலும் படிக்க...
ஏர் இந்தியா விபத்து வேண்டுமென்றே நிகழ்ந்ததா?

குஜராத்திலிருந்து கடந்த ஜூன் 12 லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா AI171 விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மேகானி நகர் குடியிருப்புப் பகுதியில் உள்ள பயிற்சி மருத்துவர் குடியிருப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 242 பேர் பயணித்த நிலையில், அதில்மேலும் படிக்க...
நெடுந்தீவில் 07 தமிழக மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 07 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினர் கடலில் மேற்கொண்ட சுற்றுக்காவல் நடவடிக்கையின் போது, நெடுந்தீவை அண்டிய கடற்பரப்பில் மீன் பிடியில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்களை கைது செய்தனர். அதன்போது அவர்களின் படகினையும்மேலும் படிக்க...
அகமதாபாத் விமான விபத்திற்கு எரிபொருள் விநியோக வால்பு அடைப்பே காரணம்

இந்தியாவின் அகமதாபாத்தில் கடந்த ஜூன் மாதம் 12 ஆம் திகதி இடம்பெற்ற விமான விபத்து குறித்த 15 பக்கங்கள் கொண்ட முதற்கட்ட அறிக்கை இன்று வெளியானது. அதன்படி, விபத்துக்குள்ளான எயார் இந்தியா விமானத்தின் கறுப்பு பெட்டியிலிருந்து மீட்கப்பட்ட உரையாடல்களை வைத்து விசாரணைமேலும் படிக்க...
பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்க வேண்டும்

நிகழ்ந்த அல்லது நடடைபெறும் குற்றங்களுக்கான சட்டங்கள் இறுக்கமாக நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என்பதுடன் காலம் புதைகுழிகள் உள்ளிட்டவற்றுக்கு காலம் தாழ்த்தாது விசாரணைகளை விரைவுபடுத்தி பாதிக்கப்பட மக்களுக்கு நீதியை வழங்க வேண்டும் என அரச சார்பற்ற இணையங்களின் தலைவர் சுகிர்தராஜ் தெரிவித்துள்ளார். யாழ்மேலும் படிக்க...
யாழ் கடற்பரப்பில் 15 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கண்டெடுப்பு

யாழ்ப்பாணம், எலுவை தீவுக்கு அப்பால் உள்ள புதுடு பகுதியில் இலங்கை கடற்படை நேற்று நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 15 மில்லியன் ரூபாய்க்கும் அதிகளவு பெறுமதிக் கொண்ட கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. அந்த கடல் பகுதியில் மிதக்கும் சந்தேகத்திற்கிடமானமேலும் படிக்க...
இலங்கை, பங்களாதேஷ் இரண்டாவது T20 போட்டி இன்று

சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று (13) ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டி இன்று இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த இருபதுக்குமேலும் படிக்க...
யாழில் சுற்றுலா பயணிகளுடன் மூழ்கிய படகு – அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு

யாழ். குடாநாட்டில் தீவு பகுதிகளுக்கு சுற்றுலாச் செல்லும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். அத்துடன், கடல்போக்குவரத்து சேவை வழங்கும் படகுகளின் தரம் மற்றும் முன் பாதுகாப்புமேலும் படிக்க...
இஷாரா செவ்வந்தியின் தாயார் வெலிக்கடை சிறைச்சாலையில் உயிரிழந்தார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தியின் தாயார் சிறையில் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதான சந்தேக நபரானஇஷாரா செவ்வந்தியின் தாயார் மற்றும்மேலும் படிக்க...
பிரித்தானியாவுக்கு சட்ட விரோதமாக புலம்பெயர்வோரை பிரான்ஸுக்கு அனுப்ப நடவடிக்கை

சிறிய படகுகளினூடாக பிரித்தானியாவுக்கு வருகைத்தரும் புலம்பெயர்ந்தோர் சில வாரங்களுக்குள் பிரான்ஸுக்குத் திருப்பியனுப்படுவார்கள் என பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனும் லண்டனில் நேற்று வியாழக்கிழமை இந்த ஒப்பந்தத்தை அறிவித்திருக்கிறார்கள். ஆரம்பத்மேலும் படிக்க...
அரசியலில் இருந்து ஓய்வு பெறும் மோடி: ஆர்எஸ்எஸ் தலைவர் கருத்தால் சலசலப்பு

பிரதமர் பதவியில் இருந்து நரேந்திர மோடி ஓய்வு பெறப்போகிறாரா என்று ஒருதரப்பினர் மீண்டும் பேசவும் விவாதிக்கவும் தொடங்கியுள்ளனர். இதனால் டெல்லி அரசியல் களத்தில் திடீரென சலசலப்பும் பரபரப்பும் நிலவுகின்றன. பாஜகவின் தோழமை அமைப்புகளில் ஒன்றான ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத்மேலும் படிக்க...
இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக நியமிக்கப் படவுள்ள எரிக் மேயர்?

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசிற்கான அமெரிக்காவின் அதிவிசேட மற்றும் முழு அதிகாரம் கொண்ட தூதுவராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க ஜனாதிபதியால் இவரது பெயர் செனட் சபையில் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர் வெளிநாட்டுத் சேவைத்மேலும் படிக்க...
வவுனியா சம்பவத்தில் காயமடைந்த 5 பொலிஸார் வைத்திய சாலையில் அனுமதி

வவுனியா கூமாங்குளம் பகுதியில் நேற்று (11) இரவு பொலிஸாருக்கும் பிரதேச மக்களுக்கும் இடையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவத்தின் போது பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. உத்தரவைப் பின்பற்றாமல் வாகனத்தை செலுத்தியமேலும் படிக்க...
வவுனியாவில் பொலிஸாருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

வவுனியா கூமாங்குளம் பகுதியில் நேற்று (11) இரவு போக்குவரத்து பொலிஸார் துரத்திச்சென்றமையால் நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளதாகவும், இதனால் அப்பகுதி மக்கள் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டமையால் அந்தப்பகுதியில் பெரும் அமைதியின்மை ஏற்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- …
- 1,078
- மேலும் படிக்க


