Author: trttamilolli
பிரித்தானியாவில் கடுமை ஆக்கப்பட்டுள்ள குடிவரவுச் சட்டங்கள் – இலங்கையர்-களுக்கும் மூடப்படும் வாய்ப்பு

பிரித்தானியாவில் ஜூலை 22ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள குடிவரவுச் சட்டங்களின் கீழ், நோயாளிகள், ஊனமுற்றோர் மற்றும் முதியோரைப் பராமரிக்கும் வேலைகளுக்கு வெளிநாட்டினரை ஆட்சேர்ப்பு செய்வது உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில், இந்த வேலைக்காக இலங்கையிலிருந்து ஏராளமானோர் சென்றிருந்த நிலையில்,மேலும் படிக்க...
ரணிலுக்கு எதிராக உயர் நீதிமன்றம் தீர்ப்பு

‘அரகலய’ போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை கலைக்க அவசரகாலச் சட்டத்தை பிரகடனப்படுத்திய ரணிலுக்கு எதிராக உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் திகதியன்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களைக்மேலும் படிக்க...
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு மட்டுமல்ல, குடிமக்களின் பாதுகாப்பிற்கும் அரசாங்கமே பொறுப்பு -கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு மட்டுமல்ல, குடிமக்களின் பாதுகாப்பிற்கும் அரசாங்கம் பொறுப்பாகும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்கு அரசாங்கம் பொறுப்பேற்கிறதா என்பது குறித்து இன்று (22) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களைமேலும் படிக்க...
செயற்கை நுண்ணறிவு அபிவிருத்திக்கு சிங்கப்பூரின் ஒத்துழைப்பு

செயற்கை நுண்ணறிவு அபிவிருத்திக்கு சிங்கப்பூரின் செயற்கை நுண்ணறிவு தொடர்பான வேலைத்திட்டத்தின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக்கொள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. செயற்கை நுண்ணறிவுக்கான இலங்கை மூலோபாயக் கொள்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் பங்காண்மை மற்றும் அறிவுப்மேலும் படிக்க...
சர்வதேச நாணய நிதியத்தியத்தின் பணியில் இருந்து கீதா கோபிநாத் விடை பெறுகின்றார்

சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் பதவி விலகவுள்ளார். எதிர்வரும் ஓகஸ்ட் மாத இறுதியில் தனது பதவியில் இருந்து விலகி அமெரிக்காவிலுள்ள ஹார்வார்ட் பல்கலைக்கழகத்திற்கு அவர் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு அவர் பொருளாதாரத் துறையில் ஆரம்பமேலும் படிக்க...
இஸ்ரேலிய படையினர் எங்கள் பணியாளர்களை ஆடைகளை களைந்து சோதனை: கைதும் செய்துள்ளனர் – உலக சுகாதார ஸ்தாபனம்

இஸ்ரேலிய படையினர் தனது பணியாளர்களை ஆடைகளை களைந்து சோதனையிட்டதுடன் கைதுசெய்துள்ளனர் என உலக சுகாதார ஸ்தாபனம் குற்றம்சாட்டியுள்ளது. இஸ்ரேல் தனது பண்டகசாலை மீது விமானதாக்குதலை மேற்கொண்டது என தெரிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம் தனது பணியாளர்களின் வீடுகளையும் இலக்குவைத்தது இதனால் பெரும் சேதமேற்பட்டுள்ளது எனமேலும் படிக்க...
பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிர்ப்பு: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்

பிஹாரில் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தின் மகர் துவார் என்ற பகுதியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் 2ம்மேலும் படிக்க...
இலங்கையர்-களுக்கு தென் கொரியாவில் 8 மாத வேலை வாய்ப்பு

தென் கொரிய குடியரசின் E-08 வீசா வகையின் கீழ் இலங்கை தொழிலாளர்களை பருவகால வேளாண் பணிகளில் ஈடுபடுத்துவதற்கான ஒப்பந்தத்திற்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. கொரிய குடியரசின் E-08 வீசா வகை (பருவகால தொழிலாளர்கள்) கீழ் இலங்கை தொழிலாளர்களை இணைத்துக் கொள்வதற்குமேலும் படிக்க...
அன்று யாழ்ப்பாண ரயிலேறி குரோதம், பிரிவினை: இன்று நாம் சகோதரரத்துவம் கொண்டு வருகின்றோம் – மகேஷ் அம்பேபிட்டிய

அன்று ரயிலேறி யாழ்ப்பாணத்துக்கு வைராக்கியம், குரோதம், பிரிவினையையே கொண்டு வந்தனர். அதன்மூலம் யாழ். நூலகத்தை எரித்து நாசமாக்கினார்கள். இன்று நாம் ரயிலேறி சகோதரரத்துவத்தை கொண்டு வருகின்றோம். வடக்கையும், தெற்கையும் இணைக்கும் உறவு பாலத்தை ஏற்படுத்தி வருகின்றோம்.”- என சோசலிச இளைஞர் சங்கத்தின்மேலும் படிக்க...
கனடிய பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு 181 மில்லியன் ரூபா மதிப்புள்ள ஹாஷிஷ் போதைப் பொருள் கடத்த முயன்றதற்காக 37 வயது கனடிய பெண் ஒருவர் இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை சுங்க கூடுதல் இயக்குநர் ஜெனரலும்மேலும் படிக்க...
புதிய பிரதம நீதியரசராக பிரிதி பத்மன் சூரசேனவின் பெயர் பரிந்துரை

உயர் நீதிமன்ற நீதிபதி பிரிதி பத்மன் சூரசேனவின் பெயரை அடுத்த பிரதம நீதியரசராகப் பரிந்துரைத்து அரசியலமைப்புச் சபைக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, நாளை நடைபெறும் கவுன்சில் கூட்டத்தில் இது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.மேலும் படிக்க...
குடும்பத்தவர்களின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்தவர்கள் பாகிஸ்தானில் ஆணவக் கொலை – சந்தேகநபர் கைது

பாக்கிஸ்தானில் குடும்பத்தவர்களின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்தவர்களை ஆணவக்கொலை செய்த நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஆண்ஒருவரும் பெண் ஒருவரும் சுட்டுக்கொலை செய்யப்படுவதை காண்பிக்கும் வீடியோ வைரலான நிலையிலேயே சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பலோச்சிஸ்தான் மாகாணத்தின் உள்ளுர் பழங்குடி இன பேரவையின் உத்தரவின் பேரிலேயேமேலும் படிக்க...
காலநிலை நெருக்கடியால் உலகம் முழுவதும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு – விஞ்ஞானிகள் தகவல்

உலகம் முழுவதும் உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கு காலநிலை நெருக்கடியே காரணம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி, 2022 ஆம் ஆண்டு முதல் தீவிர காலநிலை நிகழ்வுகளைத் தொடர்ந்து பல உணவுப் பொருட்கள் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உணவுகளில்மேலும் படிக்க...
தென் கொரியாவில் மோசமான வானிலை – இதுவரை 14 பேர் பலி

தென் கொரியாவில் பல நாட்களாக பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மை அலுவலகம் தெரிவித்துள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள்மேலும் படிக்க...
தரையிறங்கும் போது ஏர் இந்திய விமானத்தின் டயர்கள் வெடித்ததால் பரபரப்பு

மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் இன்று திங்கள்கிழமை காலை பெய்த கனமழை காரணமாக, தரையிறங்கும் போது ஏர் இந்தியா விமானம் ஓடுபாதையை விட்டு விலகிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. A320 விமானம் பிரதான ஓடுபாதை 27 இல் இருந்துமேலும் படிக்க...
கொழும்பு – கண்டி வீதியில் இடம்பெற்ற வாகன விபத்து

கொழும்பு – கண்டி வீதியில் உள்ள தித்வெல் மங்கட பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும், ஒரு டிப்பர் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தில் பேருந்தின் சாரதி மற்றும் பிக்கு ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகமேலும் படிக்க...
மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கு – 19 ஆண்டுகளுக்கு பின்னர் குற்றவாளிகள் 12 பேர் விடுதலை

கடந்த 2006ஆம் ஆண்டு இடம்பெற்ற மும்பை ரயில் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் தண்டனை விதிக்கப்பட்டிருந்த 12 பேரையும் விடுதலை செய்து மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2006ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் திகதி மும்பையின் புறநகரில் உள்ள ஏழு ரயில்களில் வெடிகுண்டுமேலும் படிக்க...
யாழில் போதைக்கு அடிமையான இளைஞன் உயிரிழப்பு

உயிர்கொல்லி போதைப்பொருளுக்கு அடிமையான இளைஞன் ஒருவர் பாழடைந்த வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ். நகர் பகுதியை அண்மித்த பகுதியை சேர்ந்த 26 வயதான இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில்,மேலும் படிக்க...
தமிழின படுகொலைக்கு பொறுக்கூறல் முற்று முழுதாக இல்லாமல் போகும் அபாயம் – கஜேந்திரகுமார் எச்சரிக்கை

ஜெனிவா கூட்டத்திற்கு முன்னர் பாதிக்கப்பட்ட தரப்பினரின் கோரிக்கைகளை முன் வைப்பதன் ஊடாக கடுமையான சர்வதேச அழுத்தத்தை கொடுக்கும் செயல் வடிவத்தை ஏற்படுத்துவதே எமது நோக்கம் என தமிழ் தேசிய மக்கள் முன்னனணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில்மேலும் படிக்க...
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா – கொடிச்சீலைக்கான காளாஞ்சி கையளிப்பு

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று (21.08.2025) காலை இடம்பெற்றது. வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நாட்டுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சிமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- …
- 1,078
- மேலும் படிக்க
