Author: trttamilolli
ஒகஸ்ட் மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை அண்மித்தது

ஒகஸ்ட் மாதத்தில் இதுவரை 99,406 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து மாத்திரம் 19,572 சுற்றுலாப் பயணிகள் வருகைத்தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், ஒகஸ்ட் மாதத்தில் பிரித்தானியாவிலிருந்து 10,970 பேரும், இத்தாலியிலிருந்து 7,641 பேரும்மேலும் படிக்க...
சிறப்புரிமைகளை நீக்கும் அரசாங்கம் – எதிர்த்து நீதிமன்றம் செல்லப் போவதில்லை: ரணில்

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்குவதை எதிர்த்து நீதிமன்றம் செல்லப் போவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சிக்குத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. சிறப்புரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கோரி நீதிமன்றம் செல்ல வேண்டிய அவசியமில்லை என்றும், முன்னாள் ஜனாதிபதிகள்மேலும் படிக்க...
ட்ரம்ப் – புட்டின் சந்திப்பு : எந்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லை?

சர்வதேசத்தினால் எதிர்பார்க்கப்பட்ட ட்ரம்ப் – புட்டின் சந்திப்பு முடிவடைந்துள்ளது. அமெரிக்காவின் அலாஸ்காவில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் எந்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லை. ரஷ்யாவுக்கும் யுக்ரைனுக்கும் இடையில் போர் நிறுத்தம் தொடர்பான இணக்கமும் ஏற்படவில்லை. எனினும், விளாடிமிர் புட்டினுடனான, யுக்ரைன் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் பாரியமேலும் படிக்க...
”அமெரிக்க வரி உயர்வால் தமிழகத்துக்கு பாதிப்பு” – மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முதல்வர் வலியுறுத்தல்

இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்க அரசு விதித்துள்ள கூடுதல் இறக்குமதி வரி காரணமாக தமிழகம் அதிக பாதிப்புகளை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், இதை கருத்தில் கொண்டு மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமேலும் படிக்க...
அவுஸ்திரேலியாவில் நிலநடுக்கம்
அவுஸ்திரேலியாவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குயின்ஸ்லாந்தின் சன்ஷைன் கடற்கரை பகுதியில் சுமார் 10 கி.மீ ஆழத்தில் இன்று காலை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் தென்கிழக்குமேலும் படிக்க...
ஐரோப்பாவில் சுற்றுலா பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்

ஐரோப்பிய நாடுகளுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள சுற்றுலாத் தளங்களில் ஒழுக்கமற்ற முறையில் நடந்து கொள்வதால் அங்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் ஸ்பெயின், போர்த்துக்கள், இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் பொது இடங்களில் மது அருந்தினாலோ, அரை குறைமேலும் படிக்க...
யாழில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த தனியார் பேருந்தில் தீ விபத்து

யாழ்ப்பாணத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்து ஒன்று சற்றுமுன்னர் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. நல்லூர் – கிட்டுப்பூங்கா பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்திலே இந்த தீ அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. பேருந்தில் தீ பற்றியதைத் தொடர்ந்து யாழ் மாநகர சபையின் தீயணைப்பு படையினர்மேலும் படிக்க...
பாகிஸ்தானில் இயற்கை அனர்த்தம் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 307 ஆக உயர்வு

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகக் காஷ்மீரில் பெய்து வரும் பலத்த மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 307 ஆக அதிகரித்துள்ளது. வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள மலைப்பாங்கான கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் அதிகளவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள்மேலும் படிக்க...
அரசை கண்டித்து இஸ்ரேலில் பாரிய போராட்டம் – 12 பேர் கைது

காசா போரை நிறுத்தி, ஹமாஸ் வசமுள்ள பணயக் கைதிகளை மீட்டு வருமாறு கோரி இஸ்ரேலியர்கள் நேற்று டெல் அவிவ் நகரில் பாரிய போராட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர். இதன்போது போராட்டக்காரர்கள் நகரின் முக்கிய வீதிகளில் போக்குவரத்தை முடக்கி, வீதியின் குறுக்கே கார் டயர்களை அடுக்கிமேலும் படிக்க...
துரித உணவுக்கு மக்கள் அதிகளவு பணம் செலவிடும் நாடுகள்

உலகம் முழுவதும் மக்கள் மத்தியில் துரித உணவு நுகர்வு அதிகரித்து வருகின்றது. இதன்காரணமாக உலகம் முழுவதும் துரித உணவு சந்தை வேகமாக வளர்ந்து வருகின்றது. அந்தவகையில் உலகில் மக்கள் துரித உணவுக்கு அதிக பணம் செலவிடும் நாடுகள் தொடர்பான பட்டியல் வெளியாகியுள்ளது.மேலும் படிக்க...
விண்வெளியில் இந்தியாவின் சொந்த ஆராய்ச்சி மையம் விரைவில் அமைக்கப்படும் – பிரதமர் மோடி
விண்வெளியில் இந்தியாவின் சொந்த ஆராய்ச்சி மையம் விரைவில் அமைக்கப்படும்” என பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். டெல்லி செங்கோட்டையில் இடம்பெற்று வரும் இந்தியாவின் 79-வது சுதந்திர தினவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்துமேலும் படிக்க...
இலங்கையில் பாதிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உணவு உண்பதை கட்டுப் படுத்தியுள்ளன – ஐ.நா. தகவல்

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் பாதிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உணவைத் தவிர்ப்பது, குறைவான உணவை உண்பது அல்லது உணவின் அளவு குறைத்தல் போன்ற சமாளிக்கும் உத்திகளை நோக்கித் திரும்பியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகத்தின் (OHCHR) அறிக்கைமேலும் படிக்க...
கடந்த வரவு செலவுத் திட்டத்தின் ஒதுக்கீடுகள் முறையாகப் பயன்படுத்தப் படவில்லை – ஜனாதிபதி

கடந்த வரவு செலவுத் திட்டத்தில் ஒவ்வொரு துறைக்கும் தேவையான ஒதுக்கீடுகள் ஒதுக்கப்பட்டிருந்தாலும், அவற்றை உரிய திட்டங்களுக்கு முறையாகப் பயன்படுத்தப்படவில்லை என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சுக்கான 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகள் குறித்தமேலும் படிக்க...
மொனராகலை வெலியாய பகுதியில் விபத்து, ஒருவர் உயிரிழப்பு, 22பேர் படுகாயம்

மொனராகலை வெலியாய பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பயணிகள் பேருந்து ஒன்றும் சுற்றுலா சென்ற தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் , 22 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று காலை (16)மேலும் படிக்க...
நாடு முழுவதும் முன்னெடுக்கப் பட்ட விசேட சோதனையில் 689 சந்தேக நபர்கள் கைது
நாடளாவிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட தேடுதல் நடவடிக்கைகளில் கடந்த 24 மணிநேரத்தில் 689 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, குற்றங்களுடன் நேரடியாக தொடர்புடைய 24 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 242 பேரும் அவர்களில் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதுமேலும் படிக்க...
ஜனாதிபதியை சந்தித்தார் புதிய பொலிஸ் மா அதிபர்

புதிய பொலிஸ்மா அதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய, நேற்று (15) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார். புதிய பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு ஜனாதிபதிக்கு அவர் நினைவுப் பரிசொன்றையும் வழங்கினார். சட்டத்தரணி பிரியந்த வீரசூரியமேலும் படிக்க...
நாளைமுதல் பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ள தபால் ஊழியர்கள்

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினர் இணைந்து நாளை (17) முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர். அதன்படி, நாளை மாலை 4.00 மணி முதல் குறித்த ஊழியர்கள் தமது சேவையில் இருந்து விலகி பணிப்புறக்கணிப்பைமேலும் படிக்க...
கானாவில் ஹெலிகொப்டர் விபத்து: பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் உட்பட 8 பேர் உயிரிழப்பு

கானாவில் (Ghana) நேற்று இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில், அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் எட்வர்ட் ஓமனே போமா (Edward Omane Boamah) மற்றும் சுற்றுச்சூழல், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் இப்ராஹிம் முர்தலா முகமது (Ibrahim Murtala Muhammed )உட்பட எட்டு பேர்மேலும் படிக்க...
7 வருடங்களுக்குப் பின்னர் சீனாவுக்கு இந்தியப் பிரதமர் மோடி விஜயம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏழு வருடங்களுக்குப் பின்னர் சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காகவே மோடி இந்தமேலும் படிக்க...
காசாவை ஐந்து மாதங்களிற்குள் முழுமையாக கைப்பற்றுவதற்கு பெஞ்சமின் நெட்டன்யாகு திட்டம்?

ஹமாசின் பிடியில் உள்ள பணயக்கைதிகளிற்கு உயிராபத்து ஏற்படலாம் என்ற இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி காசாவை முழுமையாக கைப்பற்றும் திட்டத்திற்கு இன்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை அனுமதி வழங்கவுள்ளது என இஸ்ரேல் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் டைம்ஸ் மேலும் தெரிவித்துள்ளதாவதுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- …
- 1,078
- மேலும் படிக்க
