Main Menu

மக்கள் போராட்ட இயக்கத்தின் ஆர்ப்பாட்டம் பொல்துவ சந்தியில் ஆரம்பம்

அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலத்திற்கும் (PSTA) ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான சட்டமூலத்திற்கும் எதிராக மக்கள் போராட்ட இயக்கத்தின் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (04) முன்னெடுக்கப்படுகின்றது.

 

இந்த ஆர்பாட்டமானது பாராளுமன்றுக்கு செல்லும் வீதியின் பொல்துவ சந்தியில் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

 

இதன்காரணமாகப் பொல்துவ சந்தியில் பொலிஸ் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக பொல்துவ சந்தி மற்றும் பாராளுமன்ற சுற்றுவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.