Main Menu

நாடு திரும்பிய ஷிரந்தியை விசாரணைக்கு முன்னிலை ஆகுமாறு உத்தரவு

நாடு திரும்பியுள்ள முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவை எதிர்வரும் ஒக்டோபர் 13 அன்று நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

முன்னாள் முதல் பெண்மணி மலேசியாவிலிருந்து விமானம் மூலம் நேற்றிரவு (05) நாடு திரும்பினார்.

மருத்துவ சிகிச்சைக்காக அவர் செப்டம்பர் 16-ஆம் திகதி அதிகாலையில் சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றிருந்ததாகக் கூறப்படுகிறது.

‘சிறிலியா சவிய’ (Siriliya Saviya) அமைப்புடன் தொடர்புடைய நிதிப் பரிவர்த்தனைகள் குறித்து, காவல்துறையின் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID) விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த பயணம் அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.