தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது: புதுச்சேரி, கேரளா, அசாமில் நாளை வாக்குப்பதிவு
புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய 3 மாநிலங்களில் ஒரே கட்டமாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிந்தது. இந்த 3 மாநிலங்களிலும் நாளை வாக்குப் பதிவு நடைபெறு கிறது.
தவெக கூட்டணி 30 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. நாம் தமிழர் கட்சி 28 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுகிறது. மாஹே, ஏனாம் தொகுதிகளில் போட்டியைத் தவிர்த்துள்ளது. இதைத் தாண்டி பிரதான கட்சிகளில் சீட் கிடைக்காத முக்கிய பிரமுகர்கள் சிலரும் பல்வேறு தொகுதிகளில் சுயேச்சையாக களமிறங்கியுள்ளனர். புதுச்சேரி தேர்தல் களத்தில் மொத்தம் 117 சுயேச்சைகள் உட்பட 294 வேட்பாளர்கள் உள்ளனர்.
ஐக்கிய ஜனநாயக முன்னணியில் காங்கிரஸ் 95, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 27 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இதர தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 115 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதர தொகுதிகள் அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
அதன் கூட்டணி கட்சியான ராய்ஜோர் தல் 16, அசாம் ஜாதிய பரிஷத் 10 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. மீதமுள்ள தொகுதிகள் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளன. பாஜக, காங்கிரஸ் கூட்டணியை தவிர்த்து திரிணமூல் 23, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 21, ஆம் ஆத்மி 14 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன.
