ஈரானின் அனுமதியுடன் 24 மணி நேரத்தில் ஹார்முஸ் வழியாகச் சென்ற 15 கப்பல்கள்
தெஹ்ரானிடம் அனுமதி பெற்ற பின்னர், கடந்த 24 மணி நேரத்தில் 15 கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையைக் கடந்து சென்றதாக ஈரானிய ஊடகங்கள் நேற்றைய (06) தினம் செய்தி வெளியிட்டன.
தெஹ்ரான் அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெற்ற பின்னரே, அந்த முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழிப்பாதை வழியாகக் கப்பல்கள் செல்ல அனுமதிக்கப்பட்டதாக ஈரானின் அரை அதிகாரப்பூர்வ ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெப்ரவரி மாத இறுதியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல்களைத் தொடங்குவதற்கு முன்பு இருந்ததை விட, அந்த நீர்வழிப்பாதை வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்து 90 சதவீதம் குறைந்துள்ளதாகவும் அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது கூட்டுத் தாக்குதலைத் தொடங்கியதில் இருந்து இப்பகுதி எச்சரிக்கை நிலையில் உள்ளது.
இந்தத் தாக்குதலில் அப்போதைய ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உட்பட இதுவரை 1,340-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
பதிலுக்கு ஈரான், இஸ்ரேலையும், ஜோர்தான்ன், ஈராக் மற்றும் அமெரிக்க இராணுவ சொத்துக்களைக் கொண்டுள்ள வளைகுடா நாடுகளையும் குறிவைத்து ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி பதிலடி கொடுத்து வருகிறது.
மேலும், அது ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் செல்வதற்கும் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.
