உலகின் மிகப்பெரிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பை தொடங்கியுள்ள இந்தியா
இந்தியா உலகின் மிகப்பெரிய தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பைத் இன்று (ஏப்ரல் 01) தொடங்கியுள்ளது.
அடுத்த ஆண்டு முழுவதும் நடைபெறவுள்ள இந்த மாபெரும் கணக்கெடுப்பில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
1.24 பில்லியன் டொலர் மதிப்பிலான இந்தக் கணக்கீட்டு அனைவரையும் உள்ளடக்கிய ஆளுகைக்கும் சான்றுகள் அடிப்படையிலான கொள்கை உருவாக்கத்திற்கும் ஆதரவளிக்கக்கூடிய தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாபெரும் முயற்சி என இந்திய அரசு குறிப்பிடுகிறது.
2011 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட முந்தைய மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் 1.21 பில்லியன் மக்கள் தொகை பதிவு செய்யப்பட்டது.
தற்போது அந்தத் தொகை 1.4 பில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இது இந்தியாவை அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக மாற்றுகின்றது.
புதிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2021 ஆம் ஆண்டு நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் கொவிட்-19 பெருந்தொற்று மற்றும் தளவாடச் சவால்கள் காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது.
சுமார் 140 கோடி மக்களைக் கொண்ட தெற்காசிய நாடான இந்தியா, தனது பெருகிவரும் மக்கள்தொகைக்கு மின்சாரம், உணவு மற்றும் இருப்பிட வசதிகளை வழங்குவதில் அதிகரித்து வரும் சவால்களை எதிர்கொள்கிறது.
இந்தியாவின் பரந்து விரிந்த பெருநகரங்களில் பல ஏற்கனவே தண்ணீர் பற்றாக்குறை, காற்று, நீர் மாசுபாடு, மற்றும் நெரிசல் மிகுந்த சேரிப்பகுதிகள் போன்ற பிரச்சனைகளால் தவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
