Main Menu

ரஷ்ய இராணுவ விமானம் விபத்து; 29 பேர் உயிரிழப்பு

கிரிமியா தீபகற்பத்தின் வான் பறப்பில் பறந்த தனது இராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 29 பேர் உயிரிழந்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு இன்று (01) தெரிவித்துள்ளது.

உள்ளூர் நேரப்படி நேற்று மாலை இடம்பெற்ற இந்த விபத்தின் போது குறித்த விமானத்தில் 23 பயணிகளும் ஆறு பணியாளர்களும் இருந்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

வழக்கமான பயணத்தின் போது தொழில்நுட்பக் கோளாறுகளால் நேற்று மாலை 06.00 மணியளவில் ஏஎன்-26 என்ற குறித்த விமானம் அதிகாரிகளுடனான தொடர்பினை இழந்ததை அடுத்து செங்குத்தான பாறை ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினர் விமானம் விபத்துக்குள்ளான இடத்தை அடைந்ததாகவும், விமானத்தின் உடைந்த பாகத்தை கண்டறிந்ததாகவும், விமானத்தில் பயணித்த எவரும் உயிர் தப்பவில்லை என்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு மேலும் குறிப்பிட்டது.