Main Menu

பீகார் ஆலய கூட்ட நெரிசலில் சிக்கி எட்டு பெண்கள் உயிரிழப்பு

பீகாரின் நாலந்தா மாவட்டத்தில் அமைந்துள்ள ஆலயம் ஒன்றில் இன்று (31) நடைபெற்ற நிகழ்வொன்றின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி எட்டுப் பெண்கள் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயமடைந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நாலந்தா மாவட்டத்தில் உள்ள பீகார் ஷெரீஃபிலிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மக்ரா கிராமத்தில் அமைந்துள்ள ஷீத்தலா மாதா ஆலயத்தில் இந்தக் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

தகவல் கிடைத்ததும் பொலிஸ் அதிகாரிகள் உள்ளூர் கிராம மக்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிவாரண மற்றும் மீட்புப் பணிகளை முன்னெடுத்தனர்.

இந்தத் துயரச் சம்பவத்திற்குப் பின்னர், பீகார் அரசு இது குறித்த முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டதுடன், காயமடைந்தவர்களுக்கு முறையான மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யுமாறும் அறிவுறுத்தியது.

அதேநேரம், இச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 6 லட்சம் ரூபா கருணைத்தொகை வழங்கப்படும் என மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார் அறிவித்துள்ளார்.