வாக்காளர்களுக்கு பணம் தருவதை தடுக்க விதிகளை திருத்த கோரிய வழக்கு உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம்
தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் விதிகளில் மாற்றம் செய்யக் கோரிய வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்படும் என மதுரை அமர்வு தெரிவித்தது.
தமிழகம், புதுச்சேரி உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்கள் அடுத்தடுத்து நடைபெறவுள்ளன. இந்தத் தேர்தகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களின் வெற்றிக்காக ஓட்டுக்கு பணம் தருவதாக தொடர்ந்து புகார்கள் இருந்து வருகின்றன.
அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்துக்காக குழந்தைகள், பெண்களை வெயிலில் நீண்ட நேரம் காத்திருக்க செய்வதை தடுக்க உத்தரவிட வேண்டும்.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி, தலைமை நீதிபதி அமர்வில் அவரது வழக்கறிஞர் முறையீடு செய்தார். அதற்கு நீதிபதிகள், தேர்தல் தொடர்பான இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்படும் என தெரிவித்தனர்.
