சர்வதேச நாணய நிதியத்தின் 5வது, 6வது மீளாய்வு குறித்து முக்கிய தீர்மானம்
இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள விரிவாக்கப்பட்ட நிதியுதவி (EFF) திட்டத்தின் கீழ், ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகளை ஒன்றிணைந்து முன்னெடுப்பது குறித்து சர்வதேச நாணய நிதியம் (IMF) கவனம் செலுத்தியுள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் மார்ச் 26 ஆம் திகதி முதல் ஏப்ரல் 09 ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.
இந்த விஜயத்தின் போது இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைத்தன்மை மற்றும் கடன் மறுசீரமைப்பு செயன்முறைகள் குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளது.
மீளாய்வுகள் வெற்றிகரமாக நிறைவடையும் பட்சத்தில், இலங்கைக்கு கிடைக்க வேண்டிய அடுத்தகட்ட நிதி தவணைகள் விடுவிக்கப்படுவதற்கு இது வழிவகுக்கும்.
இக்குழுவினர் ஜனாதிபதி, நிதியமைச்சின் அதிகாரிகள் மற்றும் மத்திய வங்கி உயரதிகாரிகளுடன் முக்கிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளனர்.
