Main Menu

முதல்வர் ஸ்டாலின் உடன் ப.சிதம்பரம் பேச்சுவார்த்தை

திமுக – காங்கிரஸ் இடையே கூட்டணி குறித்த குழப்பம் நீடிக்கும் நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் இன்று (மார்ச் 3) திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக திமுக – காங்கிரஸ் கூட்டணியில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. கடந்த சில வாரங்களாகவே ஆட்சியில் பங்கு வேண்டும், அதிக தொகுதிகள் வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் சில தலைவர்கள் பேசியது பரபரப்பை உருவாக்கியது. இன்னும் சில தலைவர்கள் தவெக தரப்பிலும் பேசி வந்தது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

கடந்த சில நாட்களாகவே காங்கிரஸ் மற்றும் திமுக இடையே பல கட்ட பேச்சுவார்த்தை நடந்தும், இறுதி முடிவு எட்டப்படாததால் கூட்டணியில் பெரும் குழப்பம் நிலவியது. மேலும், காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் நீடிக்குமா அல்லது த.வெ.க பக்கம் செல்லுமா என்று பரபரப்பும் நிலவியது.இந்தப் பேச்சுவார்த்தையின் போது திமுக 29 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் இரு ராஜ்ய சபா சீட் கொடுக்க ஒப்புக்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.