Main Menu

பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் ; கொழும்பில் போக்குவரத்து நெரிசல்

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று செவ்வாய்க்கிழமை (17) ஏற்பாடு செய்திருந்த போராட்டப் பேரணியினால் கொழும்பு பல்கலைக்கழகத்தை அண்மித்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அதன்படி, குமாரதுங்க முனிதாச மாவத்தையின் ஒரு வழிப்பாதையில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.