“எங்களுக்கு நிவாரணம் வேண்டாம்; சுதந்திரமாக தொழில் செய்ய விடுங்கள்!” – நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன்
வடக்கு, கிழக்கு மக்களுக்கு நிவாரணேமே தேவையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.
அந்த மக்களை சுதந்திரமாக அவர்களது வாழ்வாதார தொழில்களை செய்வதற்கு வழிவகுத்தாலே போதுமானது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சூரியன் வானொலியில் ஒலிபரப்பான விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கடற்றொழிலை சுதந்திரமாக மேற்கொள்ள முடியவில்லை எனவும் மாடுகளுக்கு மேய்ச்சல் தரை இல்லை எனவும் ரவிகரன் கூறினார்.
மேலும், இதுவரை நெல்லை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை எனவும் அதன் விவசாயிகள் பாரிய இன்னல்களை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அஸ்வெசும கொடுப்பனவும் உரிய மக்களுக்கு கிடைப்பதில்லை என ரவிகரன் தெரிவித்தார்.
எனவே இந்த நிலைகள் எல்லாம் மாற வேண்டும் என்றே தாம் எதிர்பார்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குறிப்பிட்டார்.
