Main Menu

போர் நிறுத்த இராஜதந்திர முயற்சிகளுக்கு மத்தியில் உக்ரைன் மீது ரஷ்யா பாரிய தாக்குதல்

உக்ரைனில் நிலவும் கடும் குளிருக்கு மத்தியில், தலைநகர் கீவ் மீது ரஷ்யா இன்று அதிகாலை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளால் பாரிய தாக்குதலை முன்னெடுத்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் தனிப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க, தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தாக்குதல்கள் தற்போது மீண்டும் தீவிரமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கீவ் நகரில் உள்ள பல தொடர்மாடி குடியிருப்புகள் மற்றும் Dnipro நகரின் உட்கட்டமைப்புகள் இந்தத் தாக்குதலில் கடுமையாகச் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபுதாபியில் உக்ரைன், ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையே அண்மையில் நடைபெற்ற முத்தரப்புப் பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக, அடுத்த கட்ட சந்திப்பு நாளை நடைபெறவுள்ள நிலையில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இராஜதந்திர முயற்சிகளுக்கு மத்தியில் உலக நாடுகளின் நம்பிக்கையைச் சிதைக்கும் வகையில் ரஷ்யாவின் இந்தத் தாக்குதல் அமைந்துள்ளது.